எமது பாடசாலையில், கடந்த 6 மாத காலமாக ஆங்கில பாடப் பயிலுனர் ஆசிரியராகக் கடமையாற்றிய Mr. Ganesharajah Keathigshan அவர்களின் பிரியாவிடை வைபவத்தின்போதான புகைப்படங்கள்.
கமு/ காரைதீவு இராம கிருஷ்ண சங்க ஆண்கள் பாடசாலையின் 110 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பழைய மாணவர்களின் ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் 04.11.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெறவுள்ளதால், சகல பழைய மாணவர்களையும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இவ்வண்ணம், 110 ஆவது ஆண்டு நிறைவு ஏற்பாட்டுக் குழு, கமு/ இ.கி.ச. ஆண்கள் பாடசாலை, காரைதீவு.
வாணி விழாவை முன்னிட்டு, எமது பாடசாலையினால் ஆண்டு தோறும் வெளியிடப்படும் "ஜெயதீபம்" எனும் நூலானது, இந்த வருடம் 110 ஆவது ஆண்டு நிறைவு சிறப்பு மலராக, காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் திரு. சபாபதி நேசராஜா அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலதிக புகைப்படங்களிற்கு இங்கே அழுத்தவும்
Comments
Post a Comment